எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.1 - சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவோம் என்று சி.பி.ஐ.(எம்), சி.பி.ஐ. கட்சிகள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளன. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிட் கட்சி (மார்க்சிட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இனிய புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 2011-ம் ஆண்டு ஏராளமான சவால்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திமுக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தும் தாராளமய கொள்கையால் உருவான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சாதாரண மக்கள் மீது பல தாக்குதல்களை தொடுத்தது. பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகள் உயர்வு ஏழை, எளிய மக்களை வாட்டி வதைத்ததுக் கொண்டிருக்கிறது.
வகுப்புவாத, சாதிய, இனவெறி தூண்டுதல் மற்றும் சமூக கொடுமைகளை வீழ்த்தவும்; மாற்றுக் கொள்கையை முன்னிறுத்தி மதர்சசார்பின்மை, மக்களிடையே நல்லிணக்கம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயலாற்ற முன்வருமாறு தமிழக மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது. அனைத்துப் பகுதி மக்களுக்கும் புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்களைத் உரித்தாக்குகிறது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன்:
உலக அரங்கில் தமிழர்களுக்கு 2012-ம் ஆண்டு நல்லாண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களை வருத்துகின்ற நதிநீர் சிக்கல், வாழ்வாதார உரிமைகள், விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் வெற்றி பெறுவோம் என்று நம்புவோம்.
2012-ம் ஆண்டில் மக்களுக்கு எல்லா நலன்களும் கிடைத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தா.பாண்டியன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


