முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு விழா

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜன.- 2 - மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கி சாலைபாதுகாப்பு வாரவிழா நேற்று துவக்கப்பட்டது.  மதுரையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் போக்குவரத்து வாரவிழா நேற்று துவக்கப்பபட்டது. மதுரை காளவாசலில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.நடராஜன் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளர்கள் மாரிப்பாண்டி, ஷேக்முகமது, மணிவண்ணன், ஏஇ பிரபுராம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இன்று காலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகை அளக்கும் கருவி மூலம் புகை பரிசோதனை நடக்கிறது. அடுத்த நாள் சாலைபாதுகாப்பை விளக்கி சைக்கிள் பேரணியும்,  போக்குவரத்து துணை ஆணையர் குமாரசாமி தலைமையில் மரம் நடும் விழாவும், வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கறுப்பு வர்ணம் பூசுவதும்,  மதுரை அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து கண்சிகிச்சை முகாமும்,  ஆட்டோ டிரைவர்களுக்கு சாலைபாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டமும், மாலையில் பிரமாண்ட வாகன பேரணியும் நடக்கிறது. இந்த பேரணியை கலெக்டர் சகாயம் துவக்கி வைக்கிறார். 7ம் தேதி காமராஜர்சாலை செல்லம் சோப் திருமண மண்டபத்தில் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேற்று துவங்கி 7ம் தேதி வரை நடைபெறுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!