முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் மீண்டும் பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, மார்ச்.15 - அ.தி.மு.க.வுடனான அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின் வெளியே வந்த தம்பிதுரை எம்.பி. பேச்சுவார்த்தை நாளையும்(இன்று) தொடரும் என்றார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடந்த 12-ந் தேதி புதுவை முன்னாள் முதல்வரும், அகில இந்திய என்.ஆர்.காங்கிரசின் தலைவருமான ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது ஜெயலலிதா, ரங்கசாமிக்கு முதல்வராக புதுவையில் மீண்டும் அமர அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. 

இதைதொடர்ந்து முதல் கட்டமாக நேற்று பகல் 1 மணிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் தம்பிதுரை எம்.பி., செம்மலை எம்.பி., ஆகியோர் புதுவை வந்தனர். இதையொட்டி புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால், பிரான்சுக்குமார் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். 

அப்போது புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஓமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோரும் உடன் இருந்தனர். 

முதல் கட்டமாக சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் மாலை இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் சரியாக மாலை 6.45 மணிக்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு ரங்கசாமி யும், அவரது கட்சியினரும் வெளியேறினர். இதையடுத்து எம்.பி.க்கள் தம்பிதுரை, செம்மலை மற்றும் புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஓமகலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஓட்டலை விட்டு புறப்பட்டனர். 

அப்போது அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் தம்பிதுரை எம்.பி. கூறியதாவது:-

அ.தி.மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அம்மாவை(ஜெயலலிதா) ரங்கசாமி சந்தித்த பின் உறுதியானது. இப்போது பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் முடிவு ஏதும் எடுக்கவில்லை. நாளையும்(இன்று) எங்கள் பேச்சுவார்த்தை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்