முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிமி இயக்கத்தினரால் சல்மான் ருஷ்டி உயிருக்கு ஆபத்து

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.20 - ராஜஸ்தானில் இன்று நடைபெறவுள்ள ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இவருக்கு இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான சிமி அமைப்பால் ஆபத்து நேரலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய நாவல் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் அவரை கொல்ல உத்தரவிட்டன. அவரது தலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் ருஷ்டி வெளிநாடுகளுக்கு பலத்த பாதுகாப்புடன் சென்றுவருகிறார். இந்நிலையில் ருஷ்டி ஜெய்ப்பூர் நகரில் நடக்கும் ஒரு இலக்கிய விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். இவர் இந்தியா வர இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ருஷ்டியின் விசாவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். மாநில அரசும் இதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனால் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் ருஷ்டி மீது செருப்பு வீசினால் ரூ. 1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. இருப்பினும் சல்மான் ருஷ்டி டெல்லிக்கு ரகசியமாக வருவார் என்று தெரிகிறது. ருஷ்டிக்கு பாதுகாப்பு அளிக்க ராஜஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ருஷ்டி தங்கும் இடம் பயண விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சல்மான் ருஷ்டியின் உயிருக்கு சிமி இயக்கத்தினரால் திடீர் ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிமி இயக்கத் தலைவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்த பிறகே இந்த எச்சரிக்கையை உள்துறை வெளியிட்டுள்ளது. சல்மான் ருஷ்டி சமீபகாலமாக பலமுறை இந்தியா வந்து சென்றுள்ளார். திடீரென இம்முறை இவருக்கு இந்த அளவு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் சல்மான் ருஷ்டி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago