முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படங்களை தயாரிக்க பெப்சியுடன் இனி ஒப்பந்தம் இல்லை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.24 - தயாரிப்பாளர்கள் இனிமேல் இஷ்டப்படியாரையும் வைத்து தொழில் செய்யலாம் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று நாட்களுக்கு முன்பு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சார்ந்த சங்கங்கள் தன்னிச்சையாக ஒரு ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து, அதை பத்திரிக்கைகள் வாயிலாக அறிவித்து விட்டார்கள். வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்கமும், தொழிலாளர்கள் சம்மேளனமும் கலந்து பேசி அனைத்து பிரிவுகளுக்கான கையொப்பம் ஆன பிறகுதான் அது ஒப்பந்தம் எனப்படுகிறது. அதை மீறி அவர்கள் தன்னிச்சையாக, ஊதிய உயர்வை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பது அந்த நடைமுறை வழக்கத்தை மீறிய செயல் ஆகும்.

ஆகவே, இனிமேல் எங்கள் சங்கத்திற்கும், பெப்சி தொழிலாளர் அமைப்பிற்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆகவே, எங்கள் சங்கத்தின் தயாரிப்பாளர்கள் இனிமேல் தங்கள் இஷ்டப்படி யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்து கொள்ளலாம். இதற்கு உடன்பட்டு தொழில் செய்ய வரும் தொழிலாளர்களுக்கு, எங்கள் சங்கம் ஒரு குழு அமைத்து, அவர்களது ஊதியத்தை நிர்ணயம் செய்து அதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் அறிவித்து கண்டிப்பாக அதை கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தும். அதை மீறும் தயாரிப்பாளர்களுக்கு, எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித ஒத்துழைப்பும் அளிக்காது. மேற்கண்ட தீர்மானங்கள் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் ஏகமனதான ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!