முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெப்சி தொழிலாளர்களுக்கு தவறாக வழிகாட்டுகிறார்கள்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜன.25 - தாங்கள் நியாயமான சம்பளம் உயர்த்தித்தர தயாராக இருந்தும் பெப்சி தொழிலாளர்களை தவறாக வழி நடத்தி குழுப்புகின்றனர் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் பிலம்சேம்பரில் நேற்று நடந்தது. சங்க நிர்வாகிகள் தேனப்பன், முரளிதரன், கலைப்புலிதாணு, சத்யஜோதி தியாகராஜன், டைரக்டர் சேரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் படப்பிடிப்புகள் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. அப்படிஒரு நிலையை எடுக்க பெப்சி அமைப்பினர் எங்களை தள்ளி விட்டனர். தன்னிச்சையாக சம்பளத்தை அறிவித்து எங்களை அவர்கள் மதிக்கவில்லை என்று அர்த்தமாகும். ரூ.350 சம்பளம் வாங்கும் தொழிலாளிக்கு ரூ.30,40,50 என்றுதான் உயர்த்தி கேட்கிறோம் என பெப்சி சங்கத்தினர் பொய் சொல்கிறார்கள். 40, 50 ரூபாயை விடகூடுதலாக ரூ.100 வரை உயர்த்தி தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் அவர்கள் வெளியிட்ட சம்பள பட்டியலில் ரூ.350-க்கு பதில் ரூ.530 என குறிப்பிட்டுள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்கள். ஆண்டுக்கு 150 படங்கள் வந்தும் 10 படங்கள் மட்டுமே வெற்றி பெறுவது என்ற நிலை உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள்.

நியாமான சம்பளம் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பெப்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பு இல்லாததால் தொழிலாளர்கள் ஏமாற்றப் படுகின்றனர். தவறாக வழி நடத்தப்படுகிறார்கள். 16 படங்களின் படப்பிடிப்பை நிறுத்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!