முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை ஐகோர்ட்டில் அத்திவரதர் சிலையை மேலும் 48 நாட்களுக்கு தரிசனத்துக்காக வைக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எடுக்கப்படும் அத்தி வரதர் சிலையை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வருகிற 17-ம் தேதி அத்தி வரதர் சிலை மீண்டும் தெப்பக்குளத்துக்குள் வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அத்திவரதர் சிலையை மேலும் 48 நாட்களுக்கு தரிசனத்துக்காக வைக்க வேண்டும் என்று முறையிடப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது மூத்த வக்கீல் பிரபாகரன் ஆஜராகி, அத்தி வரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டுமே வெளியில் வைக்கப்படுகிறது. அப்போது பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தற்போது 48 நாட்கள் முடிந்து வருகிற 17-ம் தேதி அத்தி வரதர் சிலையை மீண்டும் குளத்துக்குள் வைக்கப் போகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த சிலையை தரிசனம் செய்ய முடியாமல் உள்ளனர். அவர்கள் தரிசனம் செய்ய ஆவலுடன் உள்ளனர்.

வயதானவர்கள் இந்த முறை தரிசனம் செய்ய முடியவில்லை என்றால், அடுத்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் தரிசனம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது. எனவே, அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இது குறித்து வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நீதிபதி, இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து