முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வரிடம் கலந்து பேசி முடிவு - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்துபேசி நிச்சயம் உதவுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஹில்டன் ஹோட்டலில், ஹூஸ்டன் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் ரேனுகத்தார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஹூஸ்டனில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து வந்து இங்கு வெற்றி பெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரை சந்தித்தேன். தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பத்திரமாக பாதுகாப்பதிலும், தமிழ்மொழியின் பெருமைகளை நிலைநாட்டுவதிலும் நீங்கள் காட்டும் உங்கள் ஆர்வத்தினால்நான் கவரப்பட்டேன். அமெரிக்காவில் வாழும், தமிழ் சமுதாயமும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. கல்வியாளர்களாகவும், பணியாளர்களாவும் வந்த பலர் இன்று தொழில் முனைவோராக, தொழிலதிபர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனாலும் தங்களது பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை மறக்காமல், அவற்றுடன் உணர்வு ரீதியாக ஒன்றிப் போயிருக்கும் உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன். சமுதாயத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அமெரிக்க நாட்டின் பண்பினை இது எதிரொலிக்கிறது.

ஆகவே இங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வுஇருக்கை’ அமைக்கும் முயற்சி மிகவும் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவாக அமைந்திருக்கிறது. அதற்காக இங்கு அமர்ந்திருக்கும் அப்பல்கலைக் கழக வேந்தர் டாக்டர். ரேனு கத்தாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முழுமையான கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பல சவால்களைச் சந்தித்த உங்களது வாழ்க்கை அனுபவங்கள்அனைவரையும் கவர்ந்திழுக்கத்தக்கது. தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பதற்குதாங்கள் அளித்துள்ள ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைய விருக்கும் தமிழ் ஆய்வு இருக்கைக்கு தமிழக அரசும் நன்கொடை அளித்திட வேண்டும் என்று உங்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை நான் உணர்ந்திருக்கிறேன். நான் சென்னை திரும்பியதும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கலந்து ஆலோசித்து, தமிழ் இருக்கைக்கு நிச்சயம் தமிழக அரசின் உதவி கிடைப்பதற்கு ஆவண செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து