எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அம்மாவின் அரசுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன என்றும் மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று அரசு பீடு நடைபோடுகிறது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் சட்டசபையில் கூறினார்.
தமிழக சட்டசபையில் நேற்று 2020–21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி செயலாற்ற வல்லவரே, செயல் திறன் படைத்தவர் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகி, நிதி ஆதாரங்களை வெகுவாக பெருக்கி, அனைத்து துறைகளுக்கும் அதனை ஒதுக்கி தந்து, நாடு வளம் பெறச் செய்து, எதிர்வந்த இன்னல்களையும் இடையூறுகளையும் பொடிப்பொடியாக்கி, துடைத்து தூரத் தள்ளி, மக்கள் நலன் ஒன்றே மனதில் கொண்டு செயலாற்றி தமிழ்க்குடியை மேலும் மேலும் முன்னேற்றவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்திடவும், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா, தனது வாழ்க்கையை முழுவதையும் தமிழக மக்களுக்கே ஈந்து, அரும்பாடுபட்டு, பெரும் பெருமையை பெற்றார்.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்னும் லட்சிய முழக்கத்தோடு மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்நாள் கடமை எனக் கொண்டு இரவு பகல் பாராமல், ஓய்வென்பதே இன்றி செயலாற்றி, தமிழக மக்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த, அம்மாவின் உழைப்பிலும், தியாகத்திலும் பூத்த அம்மாவின் அரசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்பாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
ஏழையரிடம் அன்பு செலுத்தி, எளியவர்க்கு ஆதரவு காட்டி, தாய்க்குலத்திற்கு பெருமை தந்து, மகளிர் அதிகாரம் பெற்றிட வழி வகுத்து, தமிழக மக்கள் அனைவரும் நலமே காண தினம் உழைத்து, அவர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று, மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை வணங்கி, அம்மா விண்ணின்று எங்களை வாழ்த்தி, வழி நடத்திட வேண்டும் என வேண்டி, 2020- 21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இப்பேரவை முன் சமர்ப்பிக்கின்றேன். தாய்த் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் உயர்த்த வேண்டும் என்று அம்மா கனவு கண்டாரோ, அந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற, அம்மாவின் அரசு தணியாத சாதனை தாகத்துடன் கடமையாற்றி வருகிறது.
அம்மாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள், அம்மாவின் தொலைநோக்குப் பார்வையினைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்கிற அவரது கொள்கையினை முன்னெடுத்துச் சென்று, தமிழ்நாட்டு மக்கள் நல் ஆளுமையின் பலன்களை முழுமையாக அடைவதற்கு அயராது பாடுபட்டு வருகிறோம். அம்மா, மூன்றாண்டுகளுக்கு முன்னர் நம்மை விட்டு நீங்கிய போது, நாம் அனைவரும் திக்கற்றவர்களாக உணர்ந்தோம். எனினும், அம்மாவின் உண்மையான தாயுள்ளம், நாங்கள் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் காட்டியுள்ளதுடன், மக்கள் பணியாற்றும் விடாமுயற்சியில் தளராத உறுதியையும், மக்கள் சேவையைத் தொடர்வதற்கான ஆற்றலையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துச் சென்றுள்ளது. அம்மாவின் மறைவிற்குப் பின்னர், இந்த அரசின் ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறி விடும் என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர்.
ஆனால், அம்மா காட்டிய வழியில், அவர் தம் நல்லாசிகளுடன் முதல்வரின் தலைமையில் மிகத் திறமையுடன் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு, அனைத்து விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்களைப் பொடிப்பொடியாக்கி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவது மட்டுமல்லாமல், மென்மேலும் வலுவடைந்து, மக்கள் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்று, பீடுநடை போட்டு வருகிறோம். உள்நாடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் அம்மாவின் அரசின் செயல்பாடுகள் மிளிர்கின்றன.
2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஆட்சிக்கான, நல் ஆளுமை விருதினை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கச் செய்து வருகிறோம். நிலையான, கணிக்கத்தக்க, அனைவருக்கும் இசைவான கொள்கைகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரும் எளிதில் அணுகி, முறையீடுகள், ஆலோசனைகள் மற்றும் உண்மையான குறைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான பதில்கள் கிடைக்கும் வகையில் இந்த அரசு செயலாற்றி வருகிறது. நாங்கள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கு உடனடியாகத் தீர்வு வழங்கி வருகின்றோம்.
நாங்கள் சமூகத்தில் உள்ள மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவர்களின் குறைகளையும் போக்கி வருகின்றோம். அறிஞர்களின் மதிநுட்ப ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் அறிவுரைகளின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்ந்த அறிவுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம். பல பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய மிகவும் விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், அவர்களின் இலட்சியங்களை அடைவதற்கும், எளிதில் அரசினை அணுகி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளோம். நம் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து திறம்பட நிலைநாட்டி, மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் நல்வாழ்வு வாழ்வதை இவ்வரசு தொடர்ந்து உறுதி செய்யும்.
தொடர்ச்சியாகப் பெறப்படும் முதலீடுகளும், சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளும், மக்களுக்கு மேன்மேலும் வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்கித் தரும். ஏழை எளியோர், நலிவுற்றோர் மற்றும் அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதை இந்த அரசு முனைப்புடன் உறுதி செய்யும். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்னும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அடங்கியுள்ளன. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆரவல்லி மலைத்தொடர் விவகாரம்: முந்தைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!
29 Dec 2025புதுடெல்லி, ஆரவல்லி மலைத்தொடர் விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு



