எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்க்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
மண்டலம் 1-ல் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களும், மண்டலம் 2-ல் தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களும், மண்டலம் 3-ல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், மண்டலம் 4-ல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களும், மண்டலம் 5-ல் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும், மண்டலம் 6-ல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களும், மண்டலம் 7-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களும், மண்டலம் 8-ல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியும் அடங்கும்
மண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் மண்டலம் 8-ல் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும். மண்டலம் 7 மற்றும் மண்டலம் 8 -க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் (Stage carriers) இயக்க அனுமதிக்கப்படுகிறது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை. அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது. அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
இ-பாஸ் முறை :
அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?


