முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமிர்தசரஸ் - குர்தாஸ்பூர் இடையே சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,  டெல்லி- அமிர்தசரஸ் விரைவுவழிச் சாலையின் ஒரு பகுதியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு புதிய பசுமை வழிச் சாலை ஏற்படுத்தப்படும். சுல்தான்பூர் லோதி, கோயிந்த்வால் சாகிப், கடூர் சாகிப், கர்தார்பூர் சாகிப் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பசுமைவழி சாலை அமையவிருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் சாலை முழுமையாக மேம்படுத்தப்படும் மற்றும் சிக்னல்கள் இல்லாத சாலையாக இது இருக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். 

பசுமைவழிச் சாலை திட்டம் நிறைவடைந்த பிறகு அமிர்தசரஸில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்வதற்கான நேரம் பாதியாக குறைந்து விடும் என்றும், அதாவது பயண நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் என்றும் இதன் மூலம் பஞ்சாப் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவு செய்யப்படுவதாக கட்காரி தெரிவித்துள்ளார். 

இந்த திட்டத்திற்காக முதலாவது கட்டமாக ரூ, 25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த பசுமை வழிச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம்  வரும் அமிர்தசரஸ் நகரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து