எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் தற்போது ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும் அடைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசியுடன் நியாயவிலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் ஜூலை 6 முதல் 9-ம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் அம்மாவின் அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 24.3.2020 முதல் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி,அவ்வப்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை அம்மாவின் அரசு அறிவித்தது.
அதன்படி, ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்க உதவித் தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டன. இது தவிர, ஊரடங்கு தொடர்ந்த காரணத்தினால், மே மற்றும் ஜுன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தகுதியான அளவு அரிசியும், சர்க்கரையும் ஏப்ரல் மாதத்தில் வழங்கியதைப் போன்றே விலையில்லாமல் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம், ஏப்ரல் முதல் ஜூன் முடிய மூன்று மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க மத்திய அரசால் உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பொறுத்து, கூடுதலான அரிசியும், இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின் படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்க தற்போது அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களாக தொடர்ந்து வழங்கி, அதனை ஜூலை மாதமும் வழங்கி மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான். நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 6.7.2020 முதல் 9.7.2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.
அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் 10.7.2020 முதல் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.
பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்: தேசிய விவசாயிகள் தினத்தில் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
23 Dec 2025சென்னை, உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளஆர்.
-
தேசிய விவசாயிகள் தினம்: உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
23 Dec 2025சென்னை, உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் என்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
சேலத்தில் டிச. 29-ம் தேதி நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
23 Dec 2025சென்னை, சேலத்தில் 29-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல.
-
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு:பியூஷ் கோயலிடம் பட்டியலை கொடுத்த எடப்பாடி பழனிசாமி: பொங்கல் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகிறது
23 Dec 2025சென்னை, தொகுதி பங்கீடு குறித்து பியூஷ் கோயலிடம் பட்டியல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் முடிந்ததும் தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும்.
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன


