எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (4.7.2020) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 381 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் கீழ், 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2017-18ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ஆம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அம்மாவின் அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், சிறுவாங்கூர் கிராமத்தில் 8.328 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவிட, 381 கோடியே 76 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு பங்களிப்பாக 186 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதியும் வழங்கும். அதில் முதல்கட்டமாக தமிழ்நாடு அரசால் 110 கோடி ரூபாய் நிதியும், மத்திய அரசால் 50 கோடி ரூபாய் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக் கட்டிடங்கள் 132 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மருத்துவமனைக் கட்டிடங்கள் 182 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குடியிருப்பு மற்றும் விடுதிக் கட்டிடங்கள் போன்றவை 66 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்படும். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் நிறுவப்படும்.
மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம் - நெட்டூரில் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம், அரியலூர் மாவட்டம் - கல்லங்குறிச்சி, தருமபுரி மாவட்டம் - பேளாரஅள்ளி, சிவகங்கை மாவட்டம் - திருப்பாச்சேத்தி, தஞ்சாவூர் மாவட்டம் - காசாங்காடு மற்றும் கதிராமங்கலம், தேனி மாவட்டம் - பு.தர்மத்துப்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் - மேலதேவநல்லூர், திருப்பூர் மாவட்டம் - வெள்ளிரவெளி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்,
பெரம்பலூர் மாவட்டம் - அம்மாபாளையத்தில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம் - பந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டிடம், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் என மொத்தம் 7 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Jul 2025சென்னை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.38 கோடியில் இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா; 80 எம்.பி.க்கள் ஆதரவு
07 Jul 2025புதுடில்லி : புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆதரவாக 80 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
-
சட்டவிரோத குடியேற்றம்: டெல்லியில் 18 வங்கதேசத்தினர் கைது
07 Jul 2025புதுடில்லி : டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த, வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட வெளிநாட்டினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் 4 பேரை மீட்ட இலங்கை கடற்படை
07 Jul 2025கொழும்பு, நடுக்கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.
-
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு : அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
07 Jul 2025வாஷிங்டன் : இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தேர்தல் சுற்றுப்பயணம்: கோவையில் தொடங்கினார் இ.பி.எஸ்.
07 Jul 2025கோவை : கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.
-
சென்னையில் ஜப்பான் கடற்படை கப்பல்
07 Jul 2025சென்னை : சென்னை துறைமுகத்துக்கு ஜப்பான் கடலோரக் காவல்படையின் இஸ்டுகுஷிமா கப்பல் வருகை தந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
07 Jul 2025சென்னை, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று
-
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவு தமிழக அரசிதழில் வெளியீடு
07 Jul 2025சென்னை, திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
07 Jul 2025சென்னை, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது: கேப்டன் சுப்மன் கில்
07 Jul 2025பர்மிங்காம் : கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.