எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்று மதுரை ஆதீனம் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பக்தி பாடலாக இருந்தாலும், திரைப்பட பாடலாக இருந்தாலும், கர்நாடக சங்கீதமாக இருந்தாலும் அனைத்து மொழிகளிலும் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ் நெஞ்சங்களில் தமிழ் செவிகளில் எப்போதும் ரீங்காரமிட்டு கொண்டிருக்கிற குரல் எஸ்.பி.பி.யின் குரலாகும். இந்திய திருநாட்டில் புகழ்மிக்க இசை வல்லுனர்களில் சிறந்த ஒருவராக அவர் திகழ்ந்தார். பாடினார். இசை அமைத்தார். நடித்தார். படங்களை தயாரித்தார்.
பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இசை விரும்பிகளின் உள்ளம் கவர் கள்வனாக திகழ்ந்தார். அவர் உடல் மறைந்தாலும் அவரது இசை ஒருபோதும் மறையாது. அவரை இழந்து தவிக்கின்ற அவரது குடும்பத்து உறுப்பினர்களுக்கும் கோடானு கோடி ரசிக பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். எஸ்.பி.பி.யின் ஆன்மா இறைவன் சன்னதியில் மகிழ்வோடும், நிம்மதியோடும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


