முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்: விமான அமைச்சகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இதற்கான சிறப்பு விமான பயண ஏற்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை நடத்துவதற்கு உக்ரைனுடன் ஒரு தனி இருதரப்பு சிறப்பு விமான  ஏற்பாட்டை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளதால், இப்போது இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

சிறப்பு விமான பயண ஏற்பாடுகள் என்பது கொரோனா தொற்றுநோய் காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும் போது வணிக பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான தற்காலிக ஏற்பாடுகள் ஆகும். அவை பரஸ்பர, அதாவது இரு நாடுகளிலிருந்தும் விமான நிறுவனங்கள் ஒரே மாதிரியான நன்மைகளை அனுபவிக்கின்றன. 

இதனால் சி.ஐ.எஸ். நாடுகளில் (ரஷ்யாவைத் தவிர) இந்திய குடிமக்கள் உக்ரைன் வழங்கிய பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டு இந்திய குடிமக்களும் பயன்பெறுவார்கள்

ஆப்கானிஸ்தான், பக்ரைன், ஓமான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், மாலத்தீவுகள், நைஜீரியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூட்டான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இதே போன்ற ஏற்பாடுகளை செய்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து