முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் விரட்டியடிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

சிக்கிம், ஜன.26. சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு எல்லையிலும் ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே, எல்லை பிரச்னை தொடர்பான பதட்டத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகள், தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று முன் தினம் 9–ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று சிக்கிம் எல்லையில் நகுலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன வீரர்களின் முயற்சியை நமது இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியர்கள் தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து