Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: மன்மோகன் சிங், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் போட்டுக் கொண்டனர்

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      இந்தியா
Image Unavailable

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப்  பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு  தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும்  பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, கடந்த 1-ம் தேதி முதல்நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். 

இதனை தொடர்ந்து, இந்நிலையில் நேற்று 4-வது நாளில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர். மேலும் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.  

ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.  டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால், டிராத் ராம் ஷா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி வசந்த் குஞ்சில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.  மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.  டெல்லி முதல்வர்  கெஜ்ரிவால் மற்றும் அவரது பெற்றோர் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர்.  இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில்  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து