Idhayam Matrimony

பிரான்ஸ் கோடீஸ்வரர் டிசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்: அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல்

திங்கட்கிழமை, 8 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான டிசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.பி.யாக இருந்தவர் ஆலிவர் டிசால்ட் (69).  பிரான்ஸின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும் டிசால்ட் விமான உற்பத்தி நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஆலிவர் டிசால்ட் , ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

ஆலிவர் டிசால்ட் பயணித்த ஹெலிகாப்டர் பிரான்சின் வடக்கே நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது.  கடந்த இரு நாட்களுக்கு முன் பாரீஸ் நகரருகே பியூவாயிஸ் என்ற பகுதியில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரார்டு டார்மனின் ஆகியோருடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் டிசால்ட்  கலந்து கொண்டிருந்தார். டிசால்ட் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தினார். அதில், நம்முடைய நாட்டிற்கு சேவையாற்றும் பணியை டசால்ட் ஒருபோதும் நிறுத்தியதே கிடையாது. அவரது திடீர் மரணம் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து