எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். இதற்கான விழா, கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் நடத்தப்படுகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 159 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி கட்டிலில் அமர இருக்கிறது. முன்னதாக நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஸ்டாலினை சட்டமன்ற தி.மு.க. தலைவராக அனைவரும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர்.
அதை தொடர்ந்து, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்க நேற்று முன்தினம் காலை 10.25 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு ஸ்டாலின் சென்றார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் சென்றனர். கவர்னரை சந்தித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை போர்த்தியதோடு, பூங்கொத்தும் கொடுத்தார். அப்போது அவரிடம், ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவு தீர்மானக் கடிதத்தையும் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து கவர்னரும், ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், கவர்னரிடம் ஸ்டாலின் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது.
இதற்கிடையே ஆட்சி அமைப்பதற்கு கவர்னர் பன்வாரிலால் அழைப்பு விடுத்தார். கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் அதற்கான கடிதத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவைக்கான பட்டியல், கவர்னரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்தப் பட்டியல் தலைமைச் செயலாளர் மூலம் பொதுத்துறைக்கு அனுப்பப்படும். பொதுத்துறை மூலம் முதல்வர் மற்றும் ஒவ்வொரு அமைச்சருக்கும் அரசுத் தரப்பில் இருந்து தரப்பட வேண்டிய கார், தனிப் பாதுகாவலர் (பி.எஸ்.ஓ.), தலைமைச் செயலகத்தில் அலுவலக அறை ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதை எளிமையாக நடத்துவதாக ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதன்படி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து உறவினர்கள் உள்பட 200 பேர் மட்டுமே அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு அமைச்சரவை பதவி ஏற்பு விழாவிற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வழங்கியுள்ளார். சில எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உள்ள திறந்த வெளியில் அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக அனைவரும் காலை 8.30 மணிக்கே வந்து விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றை செய்து வைக்கும்படி கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அழைப்பு விடுப்பார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சராக பெயர் சொல்லி மேடைக்கு கவர்னர் அழைப்பார். முதலில் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் மேடைக்கு வந்ததும், கவர்னர் தொடங்கும் வாசகத்தை அப்படியே அவர் படிப்பார். அதன்படி, மு.க.ஸ்டாலின் அந்த பிரமாணத்தை படித்து முடிப்பார். அதைத் தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணமும் அதே வகையில் செய்து வைக்கப்படும்.
அதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள அமைச்சர் அழைக்கப்படுவார். அந்த வகையில் ஒவ்வொரு அமைச்சராக வரிசையாக மேடைக்கு வந்து 2 உறுதி மொழி பிரமாணங்களை வாசித்து பதவி ஏற்பார்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள கோப்பில் கையெழுத்திடுவார்கள். இந்த பதவியேற்பு நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அனைவருக்கும் தேநீர் விருந்தளிப்பார். அதில் பங்கேற்று விட்டு, முதல்வர் மற்றும் அமைச்சர்களாக அனைவரும், அவர்களுக்கென்று அளிக்கப்பட்ட கார் மற்றும் பாதுகாவலர்களுடன் தலைமை செயலகத்திற்கு செல்வார்கள். தலைமைச் செயலகத்தில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த அறைகளுக்குச் சென்று அமைச்சர்களை பொன்னாடை போர்த்தி வாழ்த்தி இருக்கையில் அமர செய்வார். முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஸ்டாலின் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


