எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன.
3 ஒருநாள் - டி20...
நியூசிலாந்து அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்னாப்பிரிக்கா மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடுகின்றன.
ஜூலை 1-ல்...
நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 2-ல் தொடங்கி ஜூன் 27-ல் முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒருநாள் தொடருடன் ஜூலை 19-ல் தொடங்கி டெஸ்ட் தொடருடன் செப்டம்பர் 12-ல் முடிவடைகிறது. இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஜூலை 1-ல் டி20 தொடருடன் தொடங்கி, ஜூலை 14 அன்று ஒருநாள் தொடருடன் முடிவடைகிறது.
இந்திய அணி சுற்றுப்பயணம்: (2022-ம் வருடம்)
டி-20 தொடர்
- 1) முதல் டி20 - ஜூலை 1, மான்செஸ்டர்.
- 2) 2-வது டி20 - ஜூலை 3, நாட்டிங்கம்.
- 3) 3-வது டி20 - ஜூலை 6, செளதாம்ப்டன்.
ஒருநாள் தொடர்
- 1) முதல் ஒருநாள் - ஜூலை 9, பிர்மிங்ஹம்.
- 2) 2-வது ஒருநாள் - ஜூலை 12, லண்டன் ஓவல்.
- 3) 3-வது ஒருநாள் - ஜூலை 14, லண்டன் லார்ட்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


