முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 முதல் 8 வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 14 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 1 முதல் 8 வரை வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாவட்டங்களில் ஆசிரியா்கள், மாணவா்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பயிற்சிக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.  பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்தோம். எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்தும் ஆலோசித்தோம். 1 முதல் 8 வரை வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம்.

பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து