எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ராஜீவ் காந்தி கொலை கைதிகள் ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியின் பதிலைப் பார்க்கும்போது 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யப் பரிந்துரைத்து 09-09-2016 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, 07-01-2019 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 116 நாட்கள் கடந்துவிட்டன என்றும், இந்த ஏழு பேரின் விடுதலை குறித்துத் தமிழக ஆளுநர் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்காமல், அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்து, அமைச்சரவையில் எடுத்த முடிவை இப்படிக் காலவரையின்றி ஆளுநர் தன்னிடமே வைத்துக் கொள்வது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது இல்லையா என்று வினவினார்.
அது மட்டுமல்லாமல், 02-02-2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற ஆரம்பிக்கும்போது, ஏழு பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தப் பிரச்சினையில் அ.தி.மு.க. போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பரிந்துரையைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக, ஏழு பேர் விடுதலை குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், 19-05-2021 அன்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். முதல்வர் கடிதம் எழுதி 124 நாட்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாதது பொது மக்களிடையே மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், "ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் ஏழு பேர் விடுதலை தொடர்பாக, முந்தைய ஆளுநரால் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், புதிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்க முடியாது" என்று சட்ட அமைச்சர் தெரிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. அமைச்சரின் பேட்டியைப் பார்க்கும்போது, இந்தப் பிரச்சினையையும் நீட் பிரச்சினை போலத் தி.மு.க. அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டதோ என்ற எண்ணம் அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது.
எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, தனிப்பட்ட முறையிலும், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலமும் மத்திய அரசுக்குப் போதுமான அழுத்தத்தைக் கொடுத்து, தி.மு.க.வி.ன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழு பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
-
கடந்த ஆண்டில் மட்டும் திருப்பதி கோவிலில் 13.52 கோடி லட்டுகள் விற்பனை
01 Jan 2026திருப்பதி, 2025-ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
-
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா-பாகிஸ்தான் தொடர்ந்து 35 - வது ஆண்டாக பரிமாற்றம்
01 Jan 2026புதுடெல்லி, இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகி
-
கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உறுதி
01 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் வழித்தடம் எது? மத்திய அமைச்சர் அஸ்வினி தகவல்
01 Jan 2026புதுடெல்லி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொல்கத்தா – கவுகாத்தி இடையே இயக்கப்பட உள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
01 Jan 2026காபூல், ஆப்கானிஸ்தானில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஆண்டு தொடக்கத்தில் குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை..!
01 Jan 2026சென்னை, இந்த ஆண்டின் தொடக்க நாளில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 99,520-க்கும் ஒரு கிராம் ரூ. 40 குறைந்து ரூ.
-
பாதுகாப்பு படை தீவிர தேடுதல் வேட்டை: மணிப்பூரில் துப்பாக்கி, டிரோன் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
01 Jan 2026இம்பால், மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 10 கையெறி குண்டுகள், 4 டெட்டனேட்டர்கள், 3 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு, 6 கண்ணீர் பு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2026
02 Jan 2026 -
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு
02 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ ஜியோ ந



