முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகப்பெரிய நெட்வொர்க்கான போதைப்பொருளை ஒழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்: திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது, இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருளை ஒழிக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவு பலன் கிடைத்துள்ளது. போதைப்பொருள் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அந்த நெட்வொர்க்கை அழிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்.

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்பை அறிந்து கொண்டு அதனை கைவிட வேண்டும். அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களை திருத்த வேண்டும். ஏராளமான போதை வஸ்துகள் நாட்டுக்குள் வருகின்றன. இந்த நுழைவு வாயில்களை அடைத்தாக வேண்டும். நாட்டோட எல்லைக்குள் போதைப்பொருள் வருவதையும், மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும் மத்திய அரசு கண்காணித்து தடுக்க வேண்டும்.  

தமிழக காவல்துறை நடத்திய சோதனையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டையில் இருந்து 1 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் சிக்கின. நாட்டுக்குள் பல்வேறு வழியாக போதைப் பொருள் வருகிறது, அதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி, பாதையை அடைக்க வேண்டும். போதைப் பொருளை புழக்கத்தில்விடும் குற்றவாளிகளில், நைஜீரியா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். போதைப் பொருள் ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. கலைத் துறையை சேர்ந்தோர் பொறுப்புணர்வோடு படைப்புகளை தரவேண்டும், அதன் பயன்பாட்டை பெருமைப்படுத்தக் கூடாது.

பெற்றோர்கள், குழந்தைகளின் மீது பாசத்தை காண்பிக்க வேண்டும். அதை மறுக்க முடியாது. ஆனால் அதற்காக அவர்கள் பாதை மாறிச் செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக அம்மா, அப்பா, அக்கா, தங்கை ஆகியோர் வீட்டில் உள்ள குழந்தைகள் வழி மாறிப் போகாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

ஒருவருக்கு ஒருவர் மனசு விட்டு பேச வேண்டும். மனம் விட்டு பேசினாலே பாதி பாரம் குறைந்து விடும். தவறான பாதைக்கு செல்லக்கூடிய தேவை நிச்சயம் இருக்காது. அதேபோல ஆசிரியர்கள், சமூக பிரபலங்கள் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து பரப்ப வேண்டும். சாதி, மத பிரச்சினைகள் தற்போது பரவலாக காணப்படுகின்றன. மத்திய அமைச்சர்கள் உட்பட பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் வெறுப்பு பேச்சுக்களை பேசிவருகின்றனர். இது இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டும் விதமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயந்து வாழக்கூடிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் சமயத்தில் நாட்டில் நடைபெற்ற பல்வேறு தாக்குதலை பற்றி அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை நமது நாட்டில் இருந்ததா?

ஊரே ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்த காலம் சென்று, இப்பொது ஒருவருக்கு ஒருவர் எதிரியாக கட்டமைக்கும் வேலையை சில மதவாதசக்திகள் செய்து வருகின்றன. அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மிகத்தை, சில கும்பல் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். வைகோவின் சமத்துவ பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து