முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி, 9-ம் தேதிகளில் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று முன்தினம், அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒட்டுமொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்தநிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  அதன்படி,  கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15,967 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.  கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72,071 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேரும்,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு  8,671 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு திரும்பப்பெற நாளை  (சனிக்கிழமை) கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து