முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா: பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி : பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, ஆபரேஷன் சிந்தூர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு அவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்து பேசினார்.

எனினும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் நேற்றும் பாதிக்கப்பட்டன. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவையில் மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தாக்கல் செய்து பேசினார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை நேற்று தாக்கல் செய்தார்.

இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது. இதன்படி, முதல்-அமைச்சர் அல்லது அமைச்சர்கள், அந்த நேரம் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ், அவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்ற தீவிர குற்றச்சாட்டுகளின்படி கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட வடிவை வழங்குகிறது.

இதனால், கைது செய்யப்பட்ட 31-வது நாள் முதல்வர் ஆனவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பலாம். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதல்வர் அல்லது அமைச்சர்களை லெப்டினன்ட் கவர்னர் பதவி நியமனம் செய்யும்போது, அதனை தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாக்கள், பாராளுமன்றத்தின் கூட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமித்ஷா கூறினார்.

இதனால், இரு அவைகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுடைய ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். எனினும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களை கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து