முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்காவில் ஓமைக்ரான் வைரசால் 4-வது அலை தொடங்கியது: மருத்துவ நிபுணர்கள் தகவல்

சனிக்கிழமை, 4 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் ஓமிக்ரான் மூலம் தென்னாப்பிரிக்காவில் 4-வது அலை தொடங்கி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 16,055 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 25 பேர் பலியாகி விட்டனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பஹாஹ்லா கூறுகையில்,

கடந்த முறை கொரோனா பாதிப்பின் போது குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை. அவர்கள் மருத்துவமனைகளில் கூட அனுமதிக்கப்படவில்லை.  ஆனால் மூன்றாவது அலையில் குழந்தைகள் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் அவர்கள் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள், 15 முதல் 19 வயதினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். 

ஆனால் தற்போது 4-வது அலை தொடங்கி விட்டது. கொரோனா பரவல் அனைத்து வயதினருக்கும் பரவுவதை நாங்கள் பார்க்கிறோம். குறிப்பாக 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எதிர்பார்த்தது போலவே குழந்தைகளிடம் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அவர்களுக்கு அடுத்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இனி வரும் வாரங்களில் குழந்தைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு முன்னர் இருந்த அலைகளை காட்டிலும் இந்த 4-வது அலை வித்தியாசமாக இருக்கிறது.

5 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஓமிக்ரான் வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மிக விரைவில் இத்தகைய பாதிப்பு இருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். அதுபோல் கர்ப்பிணிகளுக்கும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

இனி வரும் வாரங்களில் கொரோனா ஏன் இந்த குறிப்பிட்ட வயதினரையும் கர்ப்பிணிகளையும் அதிகமாக தாக்குகிறது என்பதற்கான காரணத்தை தெரியப்படுத்துவோம். தென்னாப்பிரிக்காவின் 9 மாகாணங்களில் 7 மாகாணங்களில் தொற்றுகளும் பாசிட்டிவிட்டி ரேட்களும் அதிகரித்து வருகின்றன. 4-வது அலையில் தென்னாப்பிரிக்கா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து