Idhayam Matrimony

ரூ. 2.93 கோடியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும்  கண்காணிப்பு பிரிவு அலுவலகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். 

2021-22ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, மனித வள மேலாண்மைத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், கூடுதல் தலைமைச் செயலாளர்/  விழிப்புப்பணி  மற்றும் நிருவாகச் சீர்திருத்த ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) சிவ் தாஸ்  மீனா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் இயக்குநர் ப.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து