முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஷ்டகர்மா விமர்சனம்

புதன்கிழமை, 16 பெப்ரவரி 2022      சினிமா
Image Unavailable

மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் சி.எஸ்.பதம்சந்த், அரிஹந்த் ராஜ் சி.எஸ். கிஷன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் அஷ்டகர்மா. கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். இசை-முத்து கணேஷ். ஓளிப்பதிவு – குரு தேவ், விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். நாயகன் கிஷன் மனதத்துவராக இருப்பதால், பேய் பிசாசு தொடர்பான நம்பிக்கை கிடையாது. இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் ஷ்ரதா சிவதாஸுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில், பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார். அப்போது பேய் இல்லை என்று கூறும் கிஷனை குறிப்பிட்ட வீட்டை கூறி உங்களால் தங்க முடியுமா? என்று மந்திரவாதி கேட்க, கிஷனும் தயங்காமல் சம்மதம் தெரிவிக்கிறார். பேய் இருப்பதாக கூறப்படும் வீட்டிற்கு செல்லும் கிஷனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கிஷன் தங்கினாரா? அவரின் முயற்சி வெற்றிபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை. பேய் – பிசாசு மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனநல மருத்துவராக நாயகன் கிஷன், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கதைக்கு தேவைப்படும் காட்சிகளில் எதார்த்தமாக நடித்துள்ளார்.கிஷனுக்கு உதவியாளராக வரும் நாயகி நந்தினி ராய், மற்றொரு நா யகியாக வரும் ஷ்ரதா சிவதாஸ் ஆகியோர்  தங்கள் பாத்திரங்களை உணரந்து நடித்திருக்கின்றனர்.முத்து கணேஷ் இசையில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையில் ரசிகர்களை மிரள வைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.மொத்தத்தில் அஷ்டகர்மா அனைவரும் விரும்பும் ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து