எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவைத்தொகை உள்பட 20.86 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்தார்.
இந்நிலையில், தனது டெல்லி பயணத்தின் 3-வது நாளான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவை தொகை 13 ஆயிரத்து 504 கோடி ரூபாய் உள்பட 20 ஆயிரத்து 860 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு:-
14-வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்க வேண்டும். 2015-2020 காலகட்டத்திற்கு, 14-வது நிதிக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளில், 2900 கிராம பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை.
இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதை போன்று 14-வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை.
இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. எனவே, அடிப்படை மானிய நிலுவைத்தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது.
பெருந்தொற்றினால், மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலம் இன்னும் கடும் நிதிச்சுமையில் உள்ளது. பெருந்தொற்றினால், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்யவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், மாநில அரசிற்கு கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்திய பொழுது, மாநிலத்தின் வருவாய் பாதுகாக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், மாநிலம் தனது நிதி சார்ந்த அதிகாரத்தைக் கைவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில், உறுதியளிக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், வசூலிக்கப்பட்ட வருவாய்க்கும் இடையே பெரும் இடைவெளி இருந்துள்ளது. பெருந்தொற்றிற்கு முன்னரே, இத்தகைய போக்கு காணப்பட்டது. அதன்பின், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், மாநிலத்தின் வருவாய் இன்னும் அதிகரிக்கவில்லை. இந்நிலையில், 30.06.2022 அன்று, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலம் முடிவுக்கு வருகிறது. இதன் விளைவாக, 2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும். இழப்பீடு வழங்கும் காலத்தை, ஜூன் 2022-க்குப் பின் குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி தொடர்ந்து முதலிடம்
28 Oct 2025துபாய் : இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது: முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதில்
28 Oct 2025பெங்களூரு : கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின்
-
மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதி: இங்கி., - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
28 Oct 2025கவுகாத்தி : 13-வது ஐ.சி.சி.
-
ஆஸி.,க்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் துவங்குமா இந்தியா? _ கான்பெராவில் இன்று முதல் போட்டி
28 Oct 2025கான்பெரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் முதல் போட்டி இன்று கான்பெராவில் ந
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.


