முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்.ஐ.சி நிறுவன பங்கு விற்பனை முடிந்தது: ஆர்வம் காட்டாத அந்நிய முதலீட்டாளர்கள்

திங்கட்கிழமை, 9 மே 2022      வர்த்தகம்
LIC 2022-04-27

இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எல்.ஐ.சி ஐ.பி.ஓ நேற்று நிறைவு பெற்ற சூழலில் சிறு முதலீட்டாளர்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் அந்நிய முதலீட்டாளர்கள் ஒதுங்கியுள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் உக்ரைன் - ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது. பங்குச்சந்தை ஏற்ற - இறக்கமாக இருப்பதன் காரணமாக எல்.ஐ.சியின் பங்கு வெளியீடு பாதிக்கப்படக் கூடும் என்பதால் மத்திய அரசு பங்கு வெளியீட்டை தாமதித்து வந்தது.

எல்.ஐ.சி பங்குகளில் ஒரு பகுதியை விற்பதன் மூலம் சுமார் ரூ. 21,000 கோடி திரட்ட அரசு எதிர்பார்க்கிறது. பேடிஎம் ஐ.பி.ஓ 2021 இல் ரூ.18,300 கோடி திரட்டியது. பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மே 4-ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் நிறைவு பெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டன. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை 1.79 மடங்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5 மடங்கு விருப்ப விண்ணப்பங்களும், ஊழியர்கள் தரப்பில் 3.8 மடங்கும், சில்லரை முதலீட்டாளர்கள் தரப்பில் 1.6 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவன முதலீட்டாளர்கள், கோடிஸ்வர முதலீட்டாளர்கள் தரப்பில் 1.24 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. சில்லரை நிறுவன முதலீட்டாளர்கள் தரப்பில் 6.90 கோடி பங்குகளுக்கு 10.99 கோடி விண்ணங்கள், அதாவது 1.59 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. பாலிசிதாரர்கள் தரப்பில் 5.04 மடங்கும், எல்.ஐ.சி ஊழியர்கள் தரப்பில் 3.79 மடங்கும் விருப்ப மனுக்கள் வந்துள்ளன. எல்.ஐ.சி ஐ.பி.ஓ விற்பனை நேற்றுடன் முடிந்தது. எனினும் விருப்பமனுக்கள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் எல்.ஐ.சி பங்கு விற்பனையில் பெரும்பாலும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே ஆர்வம் காட்டியுள்ளனர். அந்நிய முதலீட்டாளர்களர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கப்பட்ட நிலையிலும் அதைக்கூட வாங்குவதற்கு ஆர்வம் செலுத்தவில்லை. இதற்கு மிக முக்கிய காரணம் தற்போது பங்குச்சந்தை ஆட்டம் கண்டு வருவது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து