முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமை ரத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
Australia-1 2022 07 03

Source: provided

மெல்போர்ன் : அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். 

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதே போல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது. 

இந்த நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து கடந்த 24-ம் தேதி தீர்ப்பு வழங்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்ட உரிமையை அதிரடியாக ரத்து செய்தது. கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில், பெண்களுக்கு ஆதரவாக 15,000 ஆஸ்திரேலியர்கள் அமெரிக்க கருக்கலைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு எதிராக பேரணி நடத்தினர். ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த பிரம்மாண்ட பேரணியில், சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர். ஆஸ்திரேலியாவிலும் உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகளுக்காக நாங்கள் நிற்கிறோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து