முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பீட்ரூட் அல்வா

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

பீட்ரூட் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. துருவி பீட்ருட் – 200 கிராம்.
  2. கருப்பு திராட்சை- 10.
  3. முந்திரி பருப்பு - 10.
  4. நெய் – 100 மில்லி.
  5. திராட்சை -10.
  6. ஏலக்காய் – 5.
  7. சர்க்கரை – 300 கிராம்.
  8. ஏலக்காய் பொடி – சிறிதளவு.

 

 

 

Method: 

பீட்ரூட் அல்வா செய்முறை:-

  1. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு ஏலக்காய் பொடியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி  ஊற வைக்கவும்.
  2. அடுப்பில் கிடாய் வைத்து 100 மில்லி  நெய் ஊற்றவும்.
  3. நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு  மற்றும் 10  கருப்பு திராட்சையை போட்டு வறுக்கவும்.
  4. 5 ஏலக்காய் மற்றும் 10 திராட்சையை போட்டு பொன்னிறமாக  வறுத்து   ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. மீதமுள்ள நெயில் 300 கிராம் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து சர்க்கரை பாகை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு பச்சை வாசனை போகும்வரை  5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
  7. தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.
  8. வறுத்து வைத்துள்ள  ஏலக்காய், முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
  9. ஏலக்காய் பொடியை போட்டு ஊற வைத்த நீர் சிறிதளவு ஊற்றி அடிபிடிக்காமல் கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. வேறு ஒரு பாத்திரத்தில் பீட்ரூட்அல்வாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  12. வறுத்து வைத்துள்ள  ஏலக்காய், முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை தூவி விடவும்.
  13. சுவையான பீட்ரூட் அல்வா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago