முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ட்ரிகர் விமர்சனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Trigger-review 2022-09-24

Source: provided

அநாதை இல்லங்களில் ஆதரவற்று இருக்கும் குழந்தைகளை வைத்து நான் பெரிய வியாபாரம் செய்யப்போகிறேன் என்கிறார் வில்லன். அவருடைய எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுகிறார் ஒரு காவல்துறை அதிகாரி. இருவரும் ஒருவரையொருவர் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது தான் டிரிகர் படத்தின் கதை. காவல்துறை வேடத்துக்குப் பொருத்தமாக அதர்வா அமைந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவருடைய வேகம் ஆச்சரியப்படுத்துகிறது. காவல்துறையில் உண்மையாக உழைத்ததால் பழிக்கு ஆளாகி மறதி நோய் வந்து அவதிப்படும் அருண் பாண்டியனின் நிதான நடிப்பு அருமை. கடைசிக்காட்சி கைதட்டல் பெறுகிறது. சில காட்சிகளிலேயே வந்தாலும் நாயகி தான்யா தனது பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். சின்னிஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், அறந்தாங்கி நிஷா, அழகம்பெருமாள், சீதா ஆகியோர் அவரவர் வேடத்துக்கேற்ப அருமையாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ராகுல்தேவ் ஷெட்டி நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பாடல் கேட்கும் ரகம் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்துக்கும்,  சண்டைக்காட்சிகளை அமைத்த திலீப்சுப்பராயனும்  படத்தின் மற்ற நாயகர்கள் எனலாம். மொத்தத்தில் டிரிகர் அதர்வாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து