எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவு பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்று விளக்கமளித்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், "உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவு பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கை: மக்களிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்
11 Feb 2026தெஹ்ரான், ஈரான் அரசுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
11 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது.
-
பாக்.கை கழிப்பறை காகிதத்தை போல பயன்படுத்தினர்: அமெரிக்கா மீது ஆசிப் கவாஜா குற்றச்சாட்டு
11 Feb 2026இஸ்லாமாபாத், கழிப்பறை காகிதத்தைப் போல பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது என்றும், பாகிஸ்தான் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் நிலை என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி
11 Feb 2026சென்னை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
-
இந்தியா - பாக்., போர் குறித்து 80-வது முறையாக ட்ரம்ப் பேச்சு
11 Feb 2026நியூயார்க், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி அரசு அமைவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை: காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து
11 Feb 2026சென்னை, கூட்டணி கட்சிகள் அமைவதில் தமிழக மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள்: இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து மக்களவையில் ராகுல் கடும் குற்றச்சாட்டு
11 Feb 2026புதுடெல்லி, நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?


