முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது டெஸ்ட் போட்டி: தோனி புதிய சாதனை படைப்பாரா?

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 22 - இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக ளுக்கு இடையேயான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புதுடெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று துவங்க இருக்கிறது. இந்தப் போட்டியிலும் தோனி தலை மையிலான இந்திய அணி வெற்றி பெ ற்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் ஆக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமை யிலான ஆஸ்திரேலிய அணிக்கும் கேப் டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

முன்னதாக முடிந்த சென்னை, ஐதரா பாத் மற்றும் மொகாலி ஆகிய 3 டெஸ் டிலும் இந்திய அணி தொடர்ந்து வெற் றி பெற்று இந்தத் தொடரை 3- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.                          

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்தி ரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உல்ள பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று துவங்க இரு க்கிறது. 

இந்தத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டும் சிறப்பாக இருக்கிறது. இதனால் இந்தி ய அணி வெற்றி வாகை சூடியது. 

முன்னதாக சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் கேப்டன் தோனி இரட்டை சதம் அடித்தார். அடுத்து ஐதராபாத்தில் நடந்த 2-வது டெஸ்டில் புஜாரா இரட்டை சதம்அடித்தார். 

பின்பு மொகாலியில் நடந்த 3- வது டெ ஸ்டில் அறிமுக வீரரான ஷிகார் தவான் 185 ரன் அடித்துஅசத்தினார். தமிழக வீரர் முரளி விஜயும் சதம் அடித்தார். 

பெளலிங்கின் போது, ஜடேஜா, ஓஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி ஆஸ்தி ரேலிய பேட்ஸ்மேன்களை திணற வை த்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் எட்கோ வன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் இந்தத் தொடரில் நன்கு ஆடி வருகின்றனர். கேப்டன் கிளார்க் உட்பட மற்ற வீரர்கள் தடுமாறி வருகின்றனர். 

இடையே துணைக் கேப்டன் வாட்சன்  உட்பட 4 வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாகும். 

தோனி தலைமையிலான இந்திய அணி இதுவரை 4 டெஸ்டில் தொடர்ந்து வெ ற்றி பெற்றது கிடையாது. இந்த டெஸ் டில் வெற்றி பெற்றால் அவர் புதிய சா தனை படைப்பார். 

இதற்கு முன்பாக அசாருதீன் தலைமை யிலான இந்திய அணி 3 டெஸ்டில் தொடர்ந்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago