முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Annamalai 2023 03 18

Source: provided

சென்னை : குடும்ப  அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 

 தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்படும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக  பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி தி.மு.க.வுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும் போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து 29,000 ரூபாயாக வழங்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். 

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து