முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 22 பேர் காயம்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஏப். 14 - ஜப்பானில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்திற்கு 22 பேர் காயமடைந்தனர். அதில் 7 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கோபே அருகே நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 2.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்து விழுந்து 22 பேர் காயமடைந்தனர். 7 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால் உயிரிழப்பு பற்றியோ வேறு சேதமதிப்பு பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ஜப்பானில் தற்போது ஒரே ஒரு அணு உலை மட்டும் இயங்கி வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடுமையான சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு இயங்கி வந்த அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago