முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியின் மேற்பரப்பில் இருந்து 32,000 அடி வரை துளையிடும் பணியை தொடங்கிய சீனா

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      உலகம்
China 2023-06-02

Source: provided

பெய்ஜிங் : பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.

உலகின் வளர்ந்த நாடுகளின் ஒன்றான சீனா, விண்வெளி ஆய்வுக்கு மத்தியில் பூமிக்கு அடியில் புதிய எல்லைகளை ஆராயும் பணிகளை தொடங்கியுள்ளது. 

அதாவது பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.  இந்த பணியை சீனா கடந்த செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க பகுதியான ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. 

அறிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பில் துளையிடும் பணிகள் 10-க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகளை அல்லது பாறை அடுக்குகளில் ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் பகுதியை அடையும். இது சுமார் 14.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறையைக் கொண்டுள்ளது. 

சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த 2021-ம் ஆண்டில் நாட்டின் சில முன்னணி விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றிய போது, பூமியின் அடிப்பகுதியை ஆய்வு செய்வதில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். 

இந்த ஆய்வுகள், கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும் என்று கூறப்படுகிறது. 

இதற்கு முன்பு பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளை ரஷ்யாவில் உள்ளது. இது 1989-ல் 12,262 மீட்டர் (40,230 அடி) ஆழத்தை எட்டிய நிலையில், இந்த பணிகள் 20 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து