முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்நாட்டு கலவரம்: சூடானில் உள்ள காப்பகத்திலிருந்த 71 குழந்தைகள் பலி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      உலகம்
Sudan-2023-06-08

கெய்ரோ, ராணுவமும் துணை ராணுவமும் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருவதால், உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானிலில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 71 குழந்தைகள் பலியான நிலையில் 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

சூடான் தலைநகர் கெய்ரோவில் இருந்த குழந்தைகள் காப்பகத்தில், உள்நாட்டு கலவரத்தால் ஏப்ரல் மாதத்திலிருந்து உணவு கிடைக்காமல் காய்ச்சலுக்குக் கூட சிகிச்சை அளிக்கப்படாததால் 71 குழந்தைகள் பலியாகின. இந்த நிலையில், யுனிசெப் தலையிட்டு, காப்பகத்திலிருந்த 300 குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

 

கடந்த மாதம் பல சர்வதேச நாளிதழ்களில் இந்த குழந்தைகள் காப்பகம் தலைப்புச் செய்தியாக மாறியது. இந்த காப்பகத்துக்கு வெளியே நடைபெற்று வந்த மிக மோசமான சண்டை காரணமாக, இந்த காப்பகத்துக்கு உணவுப்பொருள்கள் கிடைப்பது நிறுத்தப்பட்டது.   இந்த காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 300 குழந்தைகளும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து