முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயது குறைந்தவன் என்பதால் என்னை சிலர் விமர்சிக்கின்றனர்: விவேக் ராமசாமி

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      உலகம்
Vivek-Ramasamy 2023-09-19

வாஷிங்டன், குறைந்த வயது காரணமாக நான் அதிபர் பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி தெரிவித்தார். 

அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். 

ஆனால், டிரம்ப் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது. இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான 38 வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது. 

பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்து வரும் ஆணித்தரமான, துணிச்சலான கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தனது மீதான விமர்சனங்களை குறித்து விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. எனது குறைந்த வயது காரணமாக நான் அதிபர் பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர். சுதந்திர பிரகடனத்தை எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே ஆனவர் என்பதை நாம் அறிவோம். 

குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும். 

சிறப்பான தகுதி, மேன்மையை தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கிறார்கள். இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை. இவ்வாறு விவேக் ராமசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து