முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் பெயரில் வீடு இல்லை. ஆனால், மத்திய அரசு லட்சக்கணக்கான மகள்களின் பெயரில் வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறது : பிரதமர் மோடி உருக்கம்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

பொடேலி : என் பெயரில் வீடு இல்லை, ஆனால் நாட்டில் பல மகள்களின் பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.   பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பொடேலி நகரில் ரூ.5,000 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி,  ஏழை மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை நான் அறிந்துள்ளேன், அவற்றை சரி செய்யும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் கோடி வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்திருப்பது குறித்து நான் மிகவும் திருப்தியாக உணர்கிறேன். ஏழை மக்களின் வீடுகள் என்பது வெறும் எண்கள் அல்ல எங்களுக்கு. ஏழை மக்கள், அவர்களுக்கான வீட்டை மரியாதையுடன் கட்டிக்கொள்ள உதவி செய்வதே மத்திய அரசின் கடமை. 

எந்த தரகர்களும் இல்லாமல், ஏழைகளுக்கு நேரடியாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வீடுகள் பெண்கள் பெயரில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.  எனது பெயரில் வீடு இல்லை. எனினும், எனது அரசு நாட்டின் லட்சோப லட்ச மகள்களின் பெயர்களில் சொந்தமாக வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறது என்று பிரதமர் மோடி உருக்கமாகக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து