முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Students

Source: provided

சென்னை : 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்று அரையாண்டு தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில் புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இன்று தொடங்க இருந்த தேர்வுகளை வரும் 13-ம் தேதி தொடங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

புதிய கால அட்டவணையை வெளியிடவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தேவையைக் கண்டறிந்து 12-ம் தேதி பாடப் புத்தகம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து