முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      தமிழகம்
RN-Ravi 2024-04-19

Source: provided

சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.   அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி - வேளச்சேரி சாலையில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப் பள்ளியில் தனது மனைவியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழகத்தில் இதற்கு முன் இருந்து கவர்னர்கள், தங்களின் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களித்து வந்தனர். ஆனால், கவர்னர் ரவி தனது வாக்கினை பிஹாரில் இருந்து தென் சென்னை தொகுதிக்கு மாற்றியுள்ளார். அதன்படி, நேற்று சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்.

வாக்குச் செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி. வாக்கு செலுத்துவது குடிமக்களின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக, முதல் முறை வாக்காளர்கள் ஆர்வமுடன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து