முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 12 ஜூன் 2024      இந்தியா
Modi 2023-08-21

Source: provided

புதுடெல்லி : பிரதமராக பதவியேற்ற ஒரே வாரத்தில் வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார் மோடி. ஜி7 மாநாட்டில் பங்கேற்க அவர் இன்று இத்தாலிக்கு புறப்பட்டு செல்கிறார். 

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றம் ஜப்பான் ஆகியவை இணைந்து அமைத்துள்ள ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியின் அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாசியாவில் இன்று தொடங்கி வரும் 15-ம் தேதி வரை நடக்க உள்ளது. 

இம்முறை ஜி7 அமைப்பின் தலைவராக உள்ள இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று அந்நாட்டிற்கு செல்கிறார். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இது. 

மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செல்கின்றனர். இப்பயணத்தில் மோடி இத்தாலி பிரதமர் மெலோனி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல உலக தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். 

பயணத்தை முடித்துக் கொண்டு நாளை  இரவு பிரதமர் மோடி டெல்லி திரும்புவார். இப்பயணம் குறித்து அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டிலும் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து