எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று (ஜூன் 18) வெளியிட்டது.
இதில் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா, ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கிம் பங்கேற்கவுள்ளனர்.பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
_____________________________________________________________________
நியூசிலாந்து ஆறுதல் வெற்றி
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவுடன்(சி பிரிவு) மோதியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
_____________________________________________________________________
போல்ட்டுக்கு வில்லியம்சன் புகழாரம்
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன் டிரண்ட் போல்ட் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவரைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது.,
ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் ஏதேனும் ஒரு விஷயம் நடைபெறும். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் விளையாடும் கடைசி ஐசிசி தொடர். நியூசிலாந்து அணிக்காகவும், உலக கிரிக்கெட்டுக்காகவும் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியிலிருந்து விடைபெறுவதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். புதிய வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பினை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றார்.
_____________________________________________________________________
லாக்கி பெர்குசன் சாதனை
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ பிரிவு ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பவுலர் லாக்கி பெர்குசன், 4 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வீசிய 24 பந்துகளிலும் ரன் ஏதும் கொடுக்காத முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முதல் இன்னிங்ஸின் 5, 7, 12 மற்றும் 14-வது ஓவர்களை அவர் வீசி இருந்தார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது செயல்பாடு மகிழ்ச்சி தந்ததாகவும். பெரிய நம்பிக்கையுடன் களம் கண்ட தங்களது அணி முதல் சுற்றோடு வெளியேறுவது வருத்தம் தருவதாகவும் லாக்கி பெர்குசன் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
பயங்கரவாதி மசூத்அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்?
30 Jun 2025காபூல், இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத்அசார் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானி
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தான்சானியாவில் பயங்கரம்: 2 பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் கருகி பலி
30 Jun 2025டொடோமா : தான்சானியாவில் இரு பஸ்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
-
இமாச்சலில் கனமழைக்கு 3 பேர் பலி
30 Jun 2025சிம்லா, இந்தியா முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.
-
மர்ம நபர்களால் மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025இம்பால் : மர்ம நபர்களால் மணிப்பூரில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 120 மின்சார பஸ்கள் சேவை தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
30 Jun 2025சென்னை : சி.சி.டி.வி. கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய 120 மின்சார பஸ்கள் சேவையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
30 Jun 2025சென்னை, தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2024-25 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ. 22.08 லட்சம் கோடி வசூல்
30 Jun 2025புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) ஒட்டுமொத்த வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ. 22.08 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
-
யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தில் ஜூலை 15 முதல் மாற்றங்கள்
30 Jun 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தில் பல புதிய மாற்றங்கள் ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வருகின்றன.