முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை எச்சரிக்கை எதிரொலி: கேரளா சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      இந்தியா
Kerala 2024-06-21

திருவனந்தபுரம், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் கேரளா சென்றுள்ளன. 

கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டியது. 

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்று கனமழையும், நாளை 23-ம் தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 

மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா சென்றுள்ளன. 

 கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்துள்ளார். 

 மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து