முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க., பிரமுகரின் அவதூறு பேச்சு: தமிழக டி.ஜி.பி.,க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      தமிழகம்
National-Commission 2023 06

Source: provided

சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை பெருங்குடியில் கடந்த 17-ம் தேதி தி.மு.க., சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில், நேற்று  தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து