முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்., மெளனம் காப்பது ஏன்? கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
JP-Natta 2023-09-12

புதுடெல்லி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் மெளனமாக இருப்பது குறித்து பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் நட்டா கூறியிருப்பதாவது., தமிழகத்தின் கள்ளக்குறிச்சியின் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கணவரை இழந்த மனைவிகளும், தந்தையை இழந்த குழந்தைகளின் அழுக்குரலின் காட்சிகள் அனைவரையும் பேச்சற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.

இத்தகைய பேரிடர் நடந்த போது, உடனடியாக மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசும் காவல்துறையும் பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதில் மும்முரமாக இருந்தது. அதனால், மேலும் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இது அரசு நடத்திய கொலை.

இந்த சம்பவம் குறித்து விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திமுகவின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மாநில காவல்துறையோ, சிபிசிஐடி காவல்துறையினரோ நேர்மையான விசாரணை நடத்துமா? கருணாபுரம் பகுதியில் அதிகளவில் தலித் மக்கள் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர். இவ்வளவு பெரிய பேரழிவு நடந்தபோது, ​​உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மௌனம் காத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

இன்டியா கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அரசுக்கு எதிராக குரல் கொடுக்காமல், மக்களையே குறை கூறியுள்ளார். இத்தருணத்தில், சிபிஐ விசாரணைக்கு செல்லவும், முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவும் திமுக-இன்டியா கூட்டணி தமிழக அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும் என்று பாஜகவும் ஒட்டுமொத்த தேசமும் கோருகின்றன.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அமைதியை கடைபிடிப்பதை கைவிட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்றாலும், இப்பிரச்னை குறித்து குறைந்தபட்சம் குரல் எழுப்பவேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு நடைபெறும் போராட்டத்தில் உங்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து