முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு அணிக்கு திரும்பிய ரோகித், கோலி

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      விளையாட்டு
18-Ram-50-A

Source: provided

புதுடெல்லி: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி திரும்பியுள்ளனர்.

வரும் 27-ம் தேதி...

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் போட்டி கொழும்பில் ஆகஸ்டு 2, 4, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

டி20 அணி விவரம்:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

ஒருநாள் அணி விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

கோரிக்கை ஏற்பு

 

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீரின் வேண்டுகோளை ஏற்று ரோகித் சர்மா, விராட் கோலி இலங்கை தொடரில் களமிறங்குகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து