முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் திடீர் பிரச்சனை: தொலைத்தொடர்பு துறை சேவைகள் கடும் பாதிப்பு உலகம் முழுவதும் 1,400 விமான சேவைகள் முடங்கின

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2024      இந்தியா
Microsoft 2024-04-06

Source: provided

புதுடில்லி:உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஐ.டி. முதல் பங்கு சந்தை, விமான சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு துறை சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. உலகம் முழுவதும் 1,400 விமான சேவைகள்  முடங்கின.

புளூ ஸ்கிரீன் எரர்... 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் நேற்று மதியம் முதல் முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் எரர் (Blue Screen of Death) தோன்றியது. இதன் காரணமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டனர். விண்டோஸ் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில நாடுகளில் வங்கி மற்றும் பங்குச்சந்தைகள் முடங்கின. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது.

சைபர் செக்யூரிட்டி... 

இதற்கான காரணம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக கம்ப்யூட்டர்களை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்பங்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. அதுபோன்ற ஒரு நிறுவனம் தான் கிரவுட்ஸ்டிரைக் (CrowdStrike). அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட அப்டேட்தான் உலக அளவில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஆட்டோ அப்டேட்... 

2011-ல் தொடங்கப்பட்ட கிரவுட்ஸ்டிரைக் உலக அளவில் முன்னணி சைபர் செக்யூரிட்டி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. 2015-ம் ஆண்டு அமெரிக்க முன்னணி நிறுவனங்களில் சீன ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியதை இந்த நிறுவனம் அம்பலப்படுத்தியது குறிப்பிடதக்கது. கம்ப்யூட்டர் சர்வர்களில் ஆட்டோ அப்டேட் வைத்திருந்தவர்கள் தான் முதலில் கிரவுட்ஸ்டிரைக்கால் பாதிக்கப்பட்டனர். இந்நிறுவனம் வெளியிட்ட அப்டேட் மற்ற நிறுவனங்களின் இயங்குதளங்களை பாதித்ததாக தகவல் இல்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 இயங்குதளம் மட்டுமே பாதிக்கப்பட்டது.

பெரிய தாக்கத்தை... 

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாகவே உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தன் பங்கு எதுவும் இல்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தாலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. விரைவில் நிலைமை சீராகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அவர்கள் தெரிவித்தபடி நிலைமை சீராகாவிட்டால் உலக அளவில் பெரும் தாக்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தக்கூடும். இதற்கிடையே இந்த விவகாரம் காரணமாக மைக்ரோசாப்ட் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செயல்பாட்டில் சிக்கல்.... 

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அப்டேட்டில் ஏற்பட்ட...

சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கின. மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பங்குச்சந்தை சார்ந்த சேவைகளும் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளன.

விமான சேவைகள்...

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக டெல்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட நிறுவன விமானங்கள் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நண்பகல் முதல் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல விமான நிலையங்களில் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பி செல்கின்றன.

பயணிகளுக்கு... 

உள்ளூர் விமானங்களுக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகளுக்கு கோவா உள்ளிட்ட விமான நிலையங்களில் கைகளால் போர்டிங் பாஸ் கைகளால் எழுதிக்கொடுக்கப்பட்டு வருகிறது. இண்டிகோ, ஆகாசா ஏர்லைன்ஸ், ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறக்கத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் முடங்கியிருப்பதால், சென்னை விமான நிலையத்தின் கணினி சர்வர்களில் ஏற்பட்ட பிரச்னையால் சென்னையில் மட்டும் 27 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் பெங்களூருவில் நேற்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிகள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. சில விமான நிலையங்களில், பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ் வழங்கப்பட்டு விமானத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயணிகள் தவிப்பு...

என்ன நடக்கிறது, எப்போது விமானம் புறப்படும் என்று தெரியாமல், முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்தில் தவிப்பில் உள்ளனர். நேற்று விமானத்துக்காக முன்பதிவு செய்திருக்கும் பயணிகளும், தங்களது விமானப் பயணம் நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உதவி எண்களைத் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள். கோவா முதல் டெல்லி செல்ல வேண்டிய விமானங்களில், பயணிகளுக்கு கைகளால் எழுதப்பட்ட போர்டிங் பாஸ்கள் வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பயணிகள் பதிவிட்டுள்ளனர். கைகளால் போர்டிங் பாஸ்கள் எழுதப்படுவதால் பல மணி நேரம் விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

உலகம் முழுவதும்...

மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அவசர கூட்டத்திற்கு ஆஸி., அரசு அழைப்பு விடுத்து உள்ளது.உலகம் முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மைக்ரோசாப்ட் பிரச்னையால் எஸ்பிஐ வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த வங்கி விளக்கம் அளித்து உள்ளது. 

மைக்ரோசாப்ட் விளக்கம்...

இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் எனக்கூறியுள்ளது. மைக்ரோசாப்ட் இயக்குநர் வெங்கட ரங்கள் கூறியதாவது: யாரும் அச்சப்பட தேவையில்லை. வங்கி சர்வர் எதுவும் பாதிக்கப்படவில்லை. தரவுகள் திருடப்படவில்லை. கிரவுட் ஸ்டிரைக் ஆன்டி வைரஸ் பயன்படுத்துவோருக்கு மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவில் உள்ள கணினிகள் பாதிக்கவில்லை. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளன. கிரவுட் ஸ்டிரைக் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் தீர்வு... 

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இணையவழியில் பாதுகாப்பு அளிக்கும் கிரவுட் ஸ்டிரைக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு இணையவழியில் விரைவில் சரி செய்யப்படும். மேக் மற்றும் லினெக்ஸ் பாதிக்கப்படவில்லை. என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து விட்டோம். விரைவில் தீர்வு காணப்படும். மைக்ரோசாப்ட் பிரச்னை சைபர் தாக்குதல் கிடையாது. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கிரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஆலோசனை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் சேவை பாதிப்பு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோளாறுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்கள், மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மைக்ரோசாப்ட் கோளாரால் பங்கு வர்த்தகதமும் பாதிப்புக்கு உள்ளாகியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து